பிரெஞ்சு நகரங்கள் இரண்டிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை... சுனாமி அபாயத்தில் இருப்பதாக யுனெஸ்கோ அறிவிப்பு
பிரெஞ்சு நகரங்கள் இரண்டு உட்பட மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு அடுத்த 30 ஆண்டுகளில் சுனாமி அபாயம் இருப்பதாக யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில், சுனாமி அபாயம் என்பது உண்மையான ஒன்று என்பதற்கு, 1979 அக்டோபர் 16 அன்று நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட சுனாமியையும், சமீபத்தில் 2020இல், கிரீக் தீவான சாமோஸ் தீவில் ஏற்பட்ட சுனாமியையும் ஆதாரமாகக் கூறலாம்.
ஆனால், பருவநிலை பிரச்சினைகளையும், உயர்ந்து வரும் கடல் மட்டத்தையும் பார்க்கும்போது, வருங்காலத்தில் மத்தியதரைக்கடல் கரைப் பகுதி நாடுகளைப் பொருத்தவரை இனி சுனாமி என்பது ஒரு அபூர்வமான நிகழ்வாக இருக்காது, அதாவது, இனி அடிக்கடி சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் அஞ்சுகிறார்கள்.
அவ்வகையில், சுனாமி அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில், தற்போது பிரான்சின் Marseille மற்றும் Cannes ஆகிய நகரங்களையும் சேர்த்துள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.