உடல் நலம் பாதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் நபரின் எச்சரிக்கை பலித்தது...
பிரேசில் நாட்டவர் ஒருவர், பின் நடக்கப்போவதை முன்பே துல்லியமான கணிப்பதால், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் நிலையில், அவர் மன்னர் சார்லசைக் குறித்து எச்சரித்த விடயம் உண்மையாகியுள்ளது.
வாழும் நாஸ்ட்ரடாமஸ்
எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட் முதல், எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé).
Image: Supplied
சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ். சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கணித்திருந்தார் அவர்.
எச்சரிக்கை பலித்தது...
அவர் எச்சரித்தது தற்போது அப்படியே பலித்துள்ளது. ஆம், மன்னர் சார்லசுக்கு புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த புரோஸ்ட்ரேட் என்பது, ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு சுரப்பியாகும்.
மன்னர் சார்லசுக்கு இந்த புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட உள்ளது.
Image: POOL/AFP via Getty Images
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஏதோஸ் மன்னருடைய உடல் நலம் குறித்து சுமார் எட்டு மாதங்கள் முன்பே கணித்திருந்தார். ஆனால், தற்போதுதான் மருத்துவர்கள் அவருடைய புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
மன்னரது உடல் நலம் குறித்து செய்தி வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து ஊடகம் ஒன்றிற்கு தற்போது பேட்டியளித்துள்ள ஏதோஸ், மன்னர் புரோஸ்ட்ரேட் பிரச்சினை தொடர்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, மன்னரைக் குறித்து நான் கவலைப்பட்டது சரிதான் என்பதை உறுதிசெய்துள்ளது.
Image: Francis Dias/NEWSPIX INTERNATIONAL
மன்னரைக் குறித்த எனது கணிப்பு துல்லியமாக நிறைவேறியுள்ளது, எனது கணிப்புகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு அவற்றைக் குறித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |