குடல் அழற்சி நோய் இருப்பதற்கான அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
தற்போது வயிற்று வலி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படுகின்றன.
செரிமான பிரச்சனைகள் பல தீவிரமான நோய்களின் எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
நமது குடல்களை பாதிக்கும் ஒரு வகையான ஒரு மருத்துவ நிலை தான் குடல் அழற்சி நோய் (IBD).

இந்த குடல் அழற்சி நோய் இரண்டு வகைப்படும். அவை அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் கிரோன் நோய்.
அந்தவகையில், குடல் அழற்சி நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்னென்ன அறிகுறிகள்?
இரத்தம் கலந்த மலம்- இரத்தக்கசிவுடன் மலம் வெளியேறுவது குடல் அழற்சி நோயின் மிகவும் பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று.
குமட்டல்- உணவு உண்ட பின் குமட்டல் வருவது குடல் அழற்சி நோயின் அபாயகரமான அறிகுறியாகும். இந்த நோயானது சிறுகுடலைச் சுருக்கி, மல அடைப்புக்கு வழிவகுப்பதால் இந்த அறிகுறி ஏற்படுகிறது.
மூட்டு வலி- குடல் அழற்சி நோய் இருந்தால் மிகவும் அரிதாக முழங்கால், மணிக்கட்டு அல்லது கீழே முதுகு பகுதியில் வலியை சந்திக்க நேரிடும்.
வயிற்று வலி- குஏனெனில் குடலில் அடைப்பு அல்லது தீவிர தொற்று ஏற்பட்டிருந்தால், இப்படியான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.
மலம் கழிக்கும் உணர்வு- அடிக்கடி அவசரமாக மலம் கழிக்க வேண்டுமென்ற உணர்வு குடல் அழற்சி நோயின் முதன்மையான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |