பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை
பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்கள், பாரிஸ் உட்பட பல நகரங்களில் தங்கள் வாகனங்களில் பயணிக்கும்போது, புகை வெளியீட்டு அளவைக் காட்டும் ஸ்டிக்கரை தங்கள் வாகனத்தில் ஒட்டியிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறினால் அபராதம்
பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்கள், பாரிஸ் உட்பட பல நகரங்களில் தங்கள் வாகனங்களில் பயணிக்கும்போது, தங்கள் வாகனங்களில் பயணிக்கும்போது, புகை வெளியீட்டு அளவைக் காட்டும் Crit'Air vignettes என அழைக்கப்படும் ஸ்டிக்கரை ஒட்டியிருக்கவேண்டும் என்றும் இந்த விதியை பின்பற்றத் தவறினால் 180 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர்.
GETTY IMAGES
பிரான்சுக்குப் பயணம் செய்யும் பிரித்தானிய சாரதிகள், முன்கூட்டியே Crit'Air ஸ்டிக்கரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதன் விலை 4.61 யூரோக்கள் ஆகும்.
பிரான்சில், இந்த ஸ்டிக்கர் விதி, குறைந்த மாசு மண்டலங்களான பாரிஸ், Strasbourg, Lyon, Marseille, Toulouse, Nice, Montpellier, Grenoble, Rouen மற்றும் Reims ஆகிய நகரங்களுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
BBC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |