விமானத்தில் சாண்ட்விச் போன்ற உணவுப்பொருட்கள் கொண்டு செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
விமானத்தில் சாண்ட்விச் முதலான உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றைக் கூறியுள்ளார் பயண ஆலோசகரான பெண் ஒருவர்.
மாமிச மற்றும் பால் உணவுகளுக்கு அபராதம்
பிரித்தானியாவிலிருந்து, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இல்லாத எந்த ஒரு நாட்டிலிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விமானத்தில் செல்வோர், மாமிச மற்றும் பால் உணவு பொருட்களை தங்களுடன் கொண்டு சென்றால் அவர்களுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்கிறார் பயண ஆலோசகரான Maryanne Sparkes என்னும் பெண்.
குறிப்பாக Jet2, Ryanair, Easyjet மற்றும் TUI நிறுவனங்களின் விமானங்களில் செல்வோர் இந்த ஆலோசனையை சீரியஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார் Maryanne.
என்ன காரணம்?
அதாவது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள், இறைச்சி, பால் போன்ற உணவுப்பொருட்களைக் கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், அதாவது, பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள், இறைச்சி, பால் போன்ற உணவுப்பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
என்னென்ன பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது?
Chicken and Bacon, Ham and Cheese, BLT (Bacon, Lettuce, and Tomato), Turkey and Swiss, Egg and Bacon, Chicken Caesar, Chicken and Stuffing, Ham Salad with Cheese, Beef and Horseradish, மற்றும் Tuna Mayo and Sweetcorn சாண்ட்விச்கள், மற்றும் பால் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்லக்கூடாது.
ஆனாலும், இத்தகைய சாண்ட்விச்களை விமான நிலையத்திலும், விமானத்திலும் வாங்கி உண்ணலாம். விமானத்தில் ஏறும் முன்போ, விமானத்திலிருந்து இறங்கும் முன்போ, அவற்றில் ஏதாவது மீதமிருந்தால், அவற்றை குப்பை தொட்டியில் போட்டுவிட்டால், விமான நிலையத்தில் அதிகாரிகள் உங்களை சோதனை செய்யும்போது அபராதம் விதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் Maryanne.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |