எச்சரிக்கை : ஜனவரி 1 முதல் உங்கள் போனில் WHATSAPP வேலை செய்யாமல் போகலாம்! காரணம் இதுதான்..
WHATSAPP விரைவில் மில்லியன் கணக்கான தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிடும், அதாவது பிரபலமான தகவல் தொடர்பு செயலியை அணுகமுடியாமலே ஏராளமானோர் 2021-க்குள் நுழைவார்கள்.
பழைய ஸ்மார்ட்போன்கள் உள்ளவர்கள் தங்கள் மென்பொருளைப் புதுப்பிக்காவிட்டால், அடுத்த ஆண்டு வாட்ஸ்அப் அவர்களுக்கு வேலை செய்யாமால் போகலாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
அதாவது அவர்கள் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே அந்த செயலியை பயன்படுத்த முடியும்.
மேலும், சில பழைய ஸ்மார்ட்போன்கள் 2021-ல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது எனக் கூறப்படுகிறது.
IOS 9 சாப்ட்வெர் அல்லது அதற்கு மேற்பட்டதாக புதுப்பிக்கப்படாத ஐபோனைப் பயன்படுத்தும் நபர்களுக்கு வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 4.0.3 OS அல்லது அதற்கு அடுத்த புதிய OSஐ பயன்படுத்தாத Android பயனர்களும் இதில் பாதிக்கப்படுவார்கள்.
உங்களிடம் ஐபோன் 4 அல்லது அதற்கு பழைய மாடல் இருந்தால் புதிய மென்பொருளுக்கு புதுப்பிக்க முடியாது.
மோட்டோரோலா டிரயோடு ரேஸ்ர் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 போன்ற சில ஆண்ட்ராய்டு சாதனங்களும் இன்னும் காலாவதியான மென்பொருளில் இயங்குகின்றன.
உங்களிடம் பழைய தொலைபேசி இருந்தால், புதிய மென்பொருளை மேம்படுத்த முயற்சிக்கலாம்.
ஆப்பிள் பயனர்கள் அவர்கள் எந்த software வேர்சின்-ஐ பயன்படுத்துகிறார்கள் என்பதைக் தெரிந்துகொள்ள, உங்கள் போனில் Settings-க்கு சென்று 'General' மற்றும் 'About' சென்று பார்க்கலாம்.
அதேபோல், Android-ல் நீங்கள் Settings-க்கு சென்று 'About Phone' சென்று பார்க்கலாம்.
மாற்றாக, நீங்கள் சற்று புதிய கைபேசிக்கு மேம்படுத்த வேண்டியிருக்கலாம்.
வாட்ஸ்அப் வலைத்தளத்தின் ஒரு பகுதி இது எந்த OSகளுடன் ஒத்துப்போகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
அனைத்துக்கும் மேலாக, அப்டேட் செய்யவேண்டிய பயனர்களுக்கு அவர்களது வாட்ஸ்அப் செயலியிலேயே எச்சரிக்கப்படுவார்கள்.