சுவிட்சர்லாந்தில் ஆண்ட்ராய்டு மொபைல்கள் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்தில் ஆண்ட்ராய்டு மொபைல்கள் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சுவிஸ் மொபைல் எண்களுக்கு சில குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றனவாம்.
அந்த செய்திகளில், உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெயில் வந்துள்ளது, அதை அறிய கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்’ என கூறப்படுமாம்.
அந்த லிங்கை கிளிக் செய்தால், ஒரு ஆப் டவுன்லோட் ஆகுமாம். அந்த வாய்ஸ் மெயிலை நீங்கள் கேட்கவேண்டுமானால், இந்த ஆப் அவசியம் என வலியுறுத்தப்படுகிறதாம்.
ஆனால், தயவு செய்து, தப்பித்தவறி கூட அந்த லிங்கை கிளிக் செய்துவிடவேண்டாம், உடனே அந்த செய்தியை டெலீட் செய்துவிடுங்கள் என பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த சாஃப்ட்வேர் மட்டும் டவுன்லோட் ஆகிவிட்டால், அப்புறம் அதை அகற்றுவது கிட்டத்தட்ட முடியாத காரியமாம். மொத்தமாக factory reset செய்தால் மட்டுமே அந்த சாஃப்ட்வேரை அகற்ற முடியுமாம்.
அதாவது, உங்கள் மொபைலில் உள்ள எல்லா தரவுகளையும் நீங்கள் இழக்க நேரிடலாம். சுவிஸ் மொபைல்களுக்கு இதுபோல் நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் தெரிவித்துள்ள நிலையில், எந்த எண்ணிலிருந்து அவை அனுப்பப்படுகின்றன என்ற விடயத்தை சுவிஸ் மொபைல் ஆபரேட்டர்கள் வெளியிடவில்லை.
இந்த மால்வேர் பாஸ்வேர்டுகளைத் திருடி லாகின் செய்யக்கூடியதாகும், ஆனால் அதை டவுன்லோட் டெய்துவிட்டால் அதை அகற்றவும் முடியாது என்பதால், ஒருமுறை இந்த குறுஞ்செய்திகளை நீங்கள் கிளிக் செய்துவிட்டால், அப்புறம் உங்கள் மொபைலை மறந்துவிடவேண்டியதுதான்.
ஆகவே, இந்த குறுஞ்செய்திகள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு சுவிஸ் மொபைல் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.