இந்தப் போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது... எச்சரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரைத் துவங்கியுள்ள நிலையில், இந்த போர் நீண்ட காலம் நீடிக்கும் என எச்சரித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
இன்று காலை நான் உங்களுக்கு ஒரு விடயம் கூறமுடியுமானால், அது, இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்பதுதான் என்றார் மேக்ரான். இந்த போர் நீடிக்கும், அதனால் ஏற்பட இருக்கும் பின் விளைவுகளும் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று கூறிய அவர், அதற்காக நாம் தயாராக இருக்கவேண்டும் என்றார்.
ஐரோப்பாவிற்கு போர் மீண்டும் திரும்பியுள்ளது என்று கூறியுள்ள மேக்ரான், துயரமான மனிதநேயச் சூழல், எதிர்க்கும் ஒரு கூட்டம் மக்கள், அவர்களுக்கு ஆதரவாக ஐரோப்பா என இது அதிபர் புடின் உருவாக்கிய நிலை என்றார்.
எப்படியாவது உக்ரைன் ரஷ்ய மோதலைத் தவிர்க்கவேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்டவர்களில் மேக்ரான் ஒருவர். அவர் பல முறை தொடர்ந்து புடினுடன் பேசி சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்ததை உலகம் அறியும்.