இலங்கை கிரிக்கெட் வீரரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்
நீதிமன்றில் ஆஜராகத் தவறிய உபுல் தரங்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான உபுல் தரங்கவுக்கு (Upul Tharanga) எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 08) பிடியாணை பிறப்பித்துள்ளது.
2024 லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியின் (2024 Legends Cricket Tournament) போது மேட்ச் பிக்ஸிங் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பான வழக்கை தரங்கவே தாக்கல் செய்துள்ளார்.
மேலும், அவர் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் கிரிக்கெட் நோக்கங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தரங்க தற்போது அமெரிக்காவில் franchise cricket tournament-ல் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Matale High Court, arrest warrant against Upul Tharanga, Chairman of the Selection Committee at Sri Lanka Cricket, former Sri Lankan Cricketer Upul Tharanga