1.1 பில்லியன் டொலரை நன்கொடைக்கு அள்ளிக்கொடுத்த கோடீஸ்வரர்.., அவரின் மரணத்திற்கு பிறகு சொத்து யாருக்கு?
உலக புகழ்பெற்ற கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பஃபெட் (Warren Buffett) பல அறக்கட்டளைகளுக்கு 1.1 பில்லியன் டொலரை நன்கொடையாக அளித்துள்ளார்.
நன்கொடை
ஆண்டுதோறும் வாரன் பஃபெட் தன்னுடைய பெர்க்ஷயர் ஹாத்வே ( Berkshire Hathaway) நிறுவன பங்குகளை தனது குடும்பத்திற்கு சொந்தமான நான்கு அறக்கட்டளைகளுக்கும் வழங்குவார்.
அந்தவகையில் நடப்பு ஆண்டில் 1.1 பில்லியன் டொலர் மதிப்புள்ள பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், தனக்கு பிறகு தனது செல்வத்தை விநியோகிக்க விரிவான திட்டத்தையும் வெளியிட்டுள்ளார்.
94 வயதான வாரன் பஃபெட் தனது பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவன பங்குதாரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தனக்கு பிறகு Berkshire Hathaway நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது தனக்கு உதவியாளராக இருக்கக்கூடிய கிரேக் ஏபில் செயல்படுவார் என்று வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.
150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் கொண்ட வாரன் பஃபெட், உலக பணக்காரர் பட்டியலில் 7 -வது இடத்தில் உள்ளார்.
இவர் தனது மரணத்திற்கு பிறகு 99.5% சொத்துக்கள் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகளை மூன்று பிள்ளைகளும் கவனித்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
அதாவது, தான் இறந்த பிறகு சொத்துக்களை பிரித்து அறக்கட்டளைகளுக்கு வழங்குவதற்கு தன்னுடைய குழந்தைகளுக்கு 10 ஆண்டுகாலம் வழங்கியிருக்கிறார்.
பெர்க்ஷயர் ஹாத்வேயின் 1,600 வகுப்பு A பங்குகளை 2,400,000 வகுப்பு B பங்குகளாக மாற்றுவதாகவும் அறிவித்துள்ளார். அதை தனது நான்கு குடும்ப அறக்கட்டளைகளுக்கும் வழங்குவதற்கான மற்றொரு உயிலை எழுதியிருக்கிறார்.
இதில், 15 லட்சம் பங்குகள் The Susan Thompson Buffett அறக்கட்டளைக்கும், 3 லட்சம் பங்குகள் The Sherwood அறக்கட்டளைக்கும், 3 லட்சம் பங்குகள் The Howard G. Buffett அறக்கட்டளைக்கும், 3 லட்சம் பங்குகள் நோவோ அறக்கட்டளைக்கும் செல்லும். இதன் மூலம் பஃபெட்டின் பெர்க்ஷயர் கிளாஸ் ஏ பங்குகள் 206,363 ஆக குறைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |