மூன்றாவது நாளிலேயே பாகிஸ்தானின் ஆட்டத்தை முடித்த ஒற்றை வீரர்! மேற்கிந்திய தீவுகள் மிரட்டல் வெற்றி
முல்தான் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் முல்தானில் நடந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 163 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 𝐟𝐨𝐫 𝐊𝐚𝐬𝐡𝐢𝐟 𝐀𝐥𝐢! 🥳
— Pakistan Cricket (@TheRealPCB) January 25, 2025
A wicket in his first over of Test cricket 👏#PAKvWI | #RedBallRumble pic.twitter.com/jKSqUmUiBR
முதல் நாளிலேயே இரு அணிகளும் ஆல்அவுட் ஆக, இரண்டாவது இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 244 ஓட்டங்கள் எடுத்தது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 254 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடனும், கம்ரான் குலாம் 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று பாகிஸ்தான் அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பாபர் அஸாம் 31 ஓட்டங்களில் கெவின் ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து கெவின் பந்துவீச்சில் ஷகீலும் வெளியேற, வாரிக்கனின் சுழலில் குலாம் (19) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் ஜோமெல் வாரிக்கனின் மாயாஜால சுழலில் அடுத்தடுத்து நடையைக் கட்ட, பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்த டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகள் சாய்த்ததுடன் 54 ஓட்டங்களும் எடுத்த ஜோமெல் வாரிக்கன் (Jomel Warrican) ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.
The main architect behind the historic win.
— Windies Cricket (@windiescricket) January 27, 2025
What a performance from our left arm spinner.#PAKvWI | #MenInMaroon pic.twitter.com/XpDHDBaGj4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |