பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலால் பறிபோனதா ஒரு உயிர்?

UK Pakistan British
By Balamanuvelan May 05, 2021 05:04 AM GMT
Report

லண்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் உறவினரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் லாகூரிலுள்ள வாடகை வீடு ஒன்றில் தன் தோழியருடன் தங்கியிருந்த Mayra Zulfiqar (26), திங்களன்று இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Mayraவின் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் உலாவரத்தொடங்கின. அவரை திருமணம் செய்ய இருவர் போட்டி போட்டதாகவும், அதனாலேயே Mayra கொல்லப்பட்டதாகவும் கூட ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கிடையில், பிரித்தானிய பிரஜையான Mayra, தன் உறவினரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் வந்தவர், அவரது பெற்றோர் லண்டனுக்குத் திரும்பிவிட்ட நிலையில், Mayra மட்டும் ஏன் லண்டனுக்குத் திரும்பவில்லை என்ற கேள்விக்கான பதிலை அவரது உறவினர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலால் பறிபோனதா ஒரு உயிர்? | Was A Life Snatched Away By Britain S Red List

கொரோனா பரவல் காரணமாக, பாகிஸ்தான் சமீபத்தில் பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அது கொரோனா அபாய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன்பே Mayraவின் பெற்றோர் லண்டன் திரும்ப டிக்கெட் ஏற்பாடு செய்துவிட்டிருக்கிறார்கள். ஆனால், Mayra டிக்கெட் முன் பதிவு செய்வதற்குள் பாகிஸ்தான் பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்போது லண்டன் திரும்பினால், 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு 1,750 பவுண்டுகள் செலவிட வேண்டியிருக்கும் என்றும், அவ்வளவு பணம் செலவிட விரும்பாததாலேயே அவர் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலால் பறிபோனதா ஒரு உயிர்? | Was A Life Snatched Away By Britain S Red List

அத்துடன், Mayraவை இரண்டு பேர் திருமணம் செய்ய விரும்பியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், ஏற்கனவே Mayraவுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்றும், அவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

மேலும், Mayra பாகிஸ்தான் வந்ததுமே Zahir Jadoon மற்றும் Saad Ameer Butt என்னும் இருவர் அவரை வம்புகிழுத்துள்ளார்கள். அது தொடர்பாக அவரது மாமா ஓருவர் பொலிசில் புகாரளித்துள்ளார்.

ஆனால், பெண்கள் மீதான புகார்களை பொதுவாக அலட்சியம் செய்யும் பொலிசார், Mayra விடயத்திலும் அலட்சியமாக இருக்க, Mayra கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலால் பறிபோனதா ஒரு உயிர்? | Was A Life Snatched Away By Britain S Red List

Mayra சட்டக்கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்தவர். விரைவில் சொந்தமாக சட்ட ஆலோசனை அலுவலகம் ஒன்றை நிறுவ விரும்பியுள்ளார். அழகான பெண்ணும் கூட அவர்.

ஆகவே, ஒரு பெண் இப்படி முன்னேறுவதா என்ற வெறுப்பில் கூட அவர்கள் Mayraவைக் கொலை செய்திருக்கலாம் என்கிறார் அவரது உறவினர் ஒருவர். இதற்கிடையில், மகள் கொல்லப்பட்ட தகவல் அறிந்து Mayraவின் பெற்றோர் பதறிப்போய் மீண்டும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்கள்.

உடற்கூறு ஆய்வு மற்றும் பொலிசாரின் விசாரணை முடியும்போதுதான் உண்மையில் Mayraவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவரும்.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US