சச்சின் மகன் என்பதால் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டாரா அர்ஜுன்? தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே விளக்கம்
மும்பை அணி நிர்வாகத்தால் சச்சின் மகன் அர்ஜுன் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது விமர்சனத்தை கிளப்பிய நிலையில் அது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் மும்பை அணி நிர்வாகத்தால் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டார் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.
இதையடுத்து கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சினுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அவரது மகன் ஏலம் எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இது குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி தலைமை பயிற்சியாளரான இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே, அர்ஜுன் அணிக்குள் வந்திருப்பது சிறப்பானதாகும்.
அவர் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு உழைத்தார்.
அர்ஜுன் திறமையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சச்சின் மகன் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கும், அதிர்ஷ்டவசமாக அவர் பந்துவீச்சாளராக உள்ளார்.
அர்ஜூன் நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொள்ள இந்த ஐபிஎல் வாய்ப்பு உதவும் என கூறியுள்ளார்.