24 வயதில் படுத்த படுக்கையாக... கடன் வாங்கிய ரூ 1 கோடி: இன்று அவரது நிறுவனத்தின் மதிப்பு
விபத்தில் சிக்கி 24 வயதிலேயே படுத்த படுக்கையாக மாறிய பெண் ஒருவர் தொடங்கிய நிறுவனம் இன்று பல கோடிகள் வருவாய் ஈட்டி வருகிறது.
பல கோடிகள் வருவாய்
Theobroma என்ற பிரபலமான பேக்கரி உணவங்களை நிறுவியவர்களில் ஒருவர் Kainaz Messman. தனது 24 வது வயதில் எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்க, படுத்த படுக்கையானார்.
ஆனால் அதில் இருந்து படிப்படியாக மீண்டவர், இன்று பல கோடிகள் வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். Kainaz Messman ஒரு பயிற்சி பெற்ற பேஸ்ட்ரி செஃப்.
மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் டெல்லியில் உள்ள ஓபராய் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் படித்தவர். முன்பு உதய்பூரில் உள்ள ஓபராய் உதய் விலாஸில் பணிபுரிந்தார்.
சாலை விபத்தில் சிக்கியதன் பின்னர் நீண்ட நேரம் நின்று வேலை பார்க்க முடியாத சூழல் உருவானது. இதனால் தமக்கு மிகவும் பிடித்தமான வேலையை விட்டுவிடும் நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் தான் 2004ல் தமது சகோதரியுடன் இணைந்து, நீண்ட கால கனவு ஒன்றை நிறைவேற்றும் வகையில் Theobroma பேக்கரியை நிறுவினார். தங்கள் கனவு நிறுவனத்திற்காக சகோதரிகள் இருவரும் தந்தையிடம் இருந்து ரூ 1 கோடி கடனாக வாங்கியுள்ளனர்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக, அவர் ஆதரித்த காரணத்திற்காக அவர்கள் நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே அவர் வைத்திருந்தார்.
தற்போது ரூ 3,500 கோடி
தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், மும்பை, டெல்லி, என்சிஆர், புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முதன்மையான நகரங்களில் 190 பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2021ல் மட்டும் Theobroma பேக்கரி நிறுவனம் ரூ 121 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நாம் என்ன உண்ண வேண்டும் என ஆசைப்படுகிறோமோ அதையே தங்கள் பேக்கரியில் உருவாக்குவதாக சகோதரிகள் இருவரும் உறுதி அளித்துள்ளனர்.
தமது உடல் நிலையை கருத்தில் கொண்டு, சிறந்த ஒரு குழுவிடம் முழு பொறுப்பையும் ஒப்படைப்பதில் சிரமங்கள் இருந்ததை அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.
தற்போது ரூ 3,500 கோடிக்கு Theobroma பேக்கரி நிறுவனம் கைமாறும் கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. Theobroma என்றால் கிரேக்க மொழியில் தெய்வங்களின் உணவு என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |