டயானா உயிரிழக்கும்போது கர்ப்பமாக இருந்தாரா? காதலர் தரப்பிலிருந்து எழுந்த குற்றச்சாட்டு
பிரித்தானிய இளவரசி டயானா உயிரிழக்கும்போது கர்ப்பமாக இருந்தார் என்றும், அதை மறைப்பதற்காகவே அவரது உடல் பதப்படுத்தப்பட்டது என்றும் அதிரடியாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த குற்றச்சாட்டைக் கூறியவர், இளவரசி டயானாவின் காதலரான டோடியின் தந்தை அல் ஃபயத்! இளவரசி டயானா இறந்ததும், அவரது உடல் பிரான்சில் பதப்படுத்தப்பட்டது. இளவரசர் சார்லஸும் டயானாவின் சகோதரிகளும் பதப்படுத்தப்பட்ட டயானாவின் உடலைத்தான் பார்த்தார்கள்.
ஆக, பிரித்தானிய உளவுத்துறையும், பிரித்தானிய தூதரகமும் திட்டமிட்டே டயானாவின் உடலை பதப்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார் அல் ஃபயத். ஆகவே, பிரித்தானிய அதிகாரியான ஜான் ஸ்டீவென்ஸ் உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக களமிறக்கப்பட்டார்.
அதன்படி, விபத்துக்குள்ளான காரிலிருந்து DNAசோதனையின் அடிப்படையில் டயானாவின்
இரத்தம் சேகரிக்கப்பட்டது. அந்த இரத்தத்தை வைத்து இளவரசி டயானா கர்ப்பமாக
இருந்தாரா என்பதை அறிவதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சோதனையின் முடிவுகள், டயானா கர்ப்பமாக இல்லை என்பதைக் காட்டின! டயானா உயிருடன் இருந்திருந்தால், அடுத்த வாரம், அதாவது ஜூன் 1ஆம் திகதி அவர் 60 வயதை எட்டியிருப்பார். அவர் உயிருடன் இல்லாததால், அவருக்கு மட்டுமல்ல, பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கும் களங்கம் விளைவிக்கும் செய்திகள் உலாவந்துகொண்டே இருக்கின்றன...