பிரதமர் ரிஷி G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா? உண்மை நிலவரம்

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Jun 14, 2024 06:15 AM GMT
Report

G7 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி சென்றுள்ள பிரித்தானிய பிரதமர், மற்ற நாடுகளின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ரிஷிக்கு.

ரிஷி G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா?

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், G7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலிக்கு சென்றுள்ளார்.

ஆனால், அவர் அங்கு முறைப்படி எந்த நாட்டின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

அத்துடன், உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலியின் பிரதமரான ஜியார்ஜியா மெலானியை (Giorgia Meloni) அவர் சந்திக்கும்போது, அவர் ரிஷியிடம், நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என கேட்டதாகவும், ரிஷியிடமிருந்து விலகியதாகவும், வெளியான வீடியோவை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகிவருகின்றன.  

ஆகவே, ரிஷி, G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்படுகிறாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

என்ன காரணம்?

அதாவது, பிரித்தானியாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில், கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. லேபர் கட்சி பெரும் முன்னேற்றத்தைக் காண, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தில் கூட இல்லாமல், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை காணப்படுகிறது.

ஆகவே, அடுத்த தேர்தல் முடியும்போது ரிஷி பிரித்தானிய பிரதமராக இருக்கமாட்டார் என்றும், அதனால்தான் அவரை மற்ற நாடுகளின் தலைவர்கள் புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் ரிஷி G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா? உண்மை நிலவரம் | Was Pm Rishi Ignored At G7 Summit

உண்மை நிலவரம்

பிரித்தானியாவில் ரிஷி கட்சியின் நிலைமை மோசமாக உள்ளது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக அவரை மற்ற நாட்டு தலைவர்கள் யாரும் புறக்கணிக்க முடியாது.

காரணம், மற்ற G7 நாடுகளின் தலைவர்கள் நிலைமை ஒன்றும் ஆஹா ஓஹோவென்று இருப்பதாக கூறமுடியாது.

பிரதமர் ரிஷி G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா? உண்மை நிலவரம் | Was Pm Rishi Ignored At G7 Summit

ஐரோப்பிய தேர்தலில் பிரான்சின் மேக்ரான் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது, ஜேர்மனியின் ஓலாஃப் கட்சியை வலது சாரிக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளியுள்ளன.

அமெரிக்காவிலோ, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடன் கடும் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறார். கனடாவில், பிரதமர் ட்ரூடோவுக்கும், ஜப்பானில், அந்நாட்டின் பிரதமர் Fumio Kishidaவுக்கும் மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது. ஆக, இவர்களுடைய நிலையை பார்க்கும்போது, பிரதமர் ரிஷியை மட்டும் புறக்கணிப்பதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றே கூறலாம்.

பிரதமர் ரிஷி G7 உச்சி மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா? உண்மை நிலவரம் | Was Pm Rishi Ignored At G7 Summit

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US