ILT20யில் வாணவேடிக்கை காட்டிய பூரன்! மும்பை இந்தியன்ஸ் மிரட்டல் வெற்றி
ILT20 தொடரில் கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மொயீன் அலி அரைசதம்
அபுதாபியில் நேற்று நடந்த ILT20 போட்டியில் கல்ஃப் ஜெயெண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய கல்ஃப் ஜெயெண்ட்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. மொயீன் அலி (Moeen Ali) 48 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
கைல் மேயர்ஸ் 18 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய ஷெப்பர்ட், பரூக்கி தலா 2 விக்கெட்டுகளும், ஜஹூர் கான் மற்றும் மொமன்த் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பூரன், வசீம் கூட்டணி
அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியில், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டாம் பான்டன் இருவரும் டக்அவுட் ஆகினர்.
பின்னர் கைகோர்த்த நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran), முஹம்மது வசீம் கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
மும்பை அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பூரன் 49 பந்துகளில் 69 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 6 பவுண்டரிகள்), முஹம்மது வசீம் 42 பந்துகளில் 59 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |