உணவகத்தில் பாத்திரம் கழுவியவர்... தொடங்கிய நிறுவனத்தின் மதிப்பு இன்று பல கோடிகள்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர், உணவகம் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்து, பின்னர் தொடங்கிய நிறுவனத்தால் இன்று கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
அனைத்து வேலைகளையும்
ராஜஸ்தானைச் சேர்ந்த ஷிஜு பாப்பன் குருகிராமில் உள்ள தொழிலதிபர். The Chatpata Affair என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர், இன்று இளம் தொழிலதிபர்களுக்கு ஒரு முன்மாதிரி.
Pizza Hut நிறுவனத்தில் குழு உறுப்பினராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கியுள்ளார் பாப்பன். அங்கே, பாத்திரம் கழுகுதல், வாடிக்கையாளர்களை கவனித்தல், உணவு மேஜைகளை சுத்தப்படுத்தல் உட்பட அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்.
ஆனால் கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் The Chatpata Affair என சின்னதாக கடை ஒன்றை திறந்துள்ளார். அவரது கடும் உழைப்பு மற்றும் துணிச்சலான முடிவுகளால் இன்று, பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
மாதம் வெறும் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு ஓராண்டு காலம் வேலை பார்த்ததாகவும், வாடகை, மின்சாரம், உணவு, போக்குவரத்து என அப்போது கடுமையாக அவதிப்பட்டதாக பாப்பன் குறிப்பிட்டுள்ளார்.
ரூ 5 லட்சம் முதலீட்டில்
டெல்லியில் வேலை தேடிச் சென்றவருக்கு Pizza Hut கிளை ஒன்றில் குழு உறுப்பினராக வேலை கிடைத்துள்ளது. ஆனால், சொந்தமாக ஒரு நிறுவனம் என்ற கனவு மட்டும் அவருக்கு உந்து சக்தியாக இருந்துள்ளது.
2020ல் சுமார் ரூ 5 லட்சம் முதலீட்டில், சின்னதாக, அர்ப்பணிக்கப்பட்ட குழு ஒன்றுடன் The Chatpata Affair என கடை ஒன்றை தொடங்கினார். தற்போது நாடு முழுவதும் 50 கிளைகள், மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ 4.5 கோடி என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இவரது பெரும்பாலான கிளைகளில் மாதம் ரூ 70,000 முதல் ரூ 80,000 வரையில் வருவாய் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |