பூரனின் அணியை நொறுக்கிய மேக்ஸ்வெலின் படை: ருத்ர தாண்டவமாடிய வீரர் (வீடியோ)
டல்லாஸில் நடந்த மேஜர் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஐ நியூயார்க்கை வீழ்த்தியது.
டி காக் கூட்டணி 70 ஓட்டங்கள்
கிராண்ட் ப்ரைரி மைதானத்தில் நடந்த போட்டியில் எம்.ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின.
Every dismissal from our game against MINY 💥#FreedomExpress #MLC2025 pic.twitter.com/rg2LO7pkLL
— Washington Freedom (@WSHFreedom) June 22, 2025
முதலில் களமிறங்கிய நியூயார்க் அணியில் மோனக் படேல் மற்றும் டி காக் கூட்டணி 70 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
மோனக் படேல் 32 (20) ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் விளாசிய டி காக் 55 (34) ஓட்டங்களில் ஹொலண்ட் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் வந்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) நிதானமாக ஆட, மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடி காட்டினார்.
பூரன் 33 (30) ஓட்டங்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, போலார்ட் 9 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் பிரேஸ்வெல் 24 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாச, நியூயார்க் 188 ஓட்டங்கள் குவித்தது.
A run-out worth watching 🎯#FreedomExpress #MLC2025 pic.twitter.com/iyBqKeksWW
— Washington Freedom (@WSHFreedom) June 22, 2025
பின்னர் ஆடிய வாஷிங்டன் அணியில் ரச்சின் ரவீந்திரா (10), கோஸ் (14) சொதப்ப மிட்செல் ஓவன் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவருடன் கைகோர்த்த ஜேக் எட்வார்ட்ஸும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது.
மேக்ஸ்வெல் மிரட்டல்
அரைசதம் விளாசிய ஓவன், 26 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
When Maxi sent the ball flying 🚀#FreedomExpress #MLC2025 | @Gmaxi_32 pic.twitter.com/8eLrs7uILa
— Washington Freedom (@WSHFreedom) June 22, 2025
30 ஓட்டங்களில் இருந்த எட்வார்ட்ஸ் வெளியேற, அணித்தலைவர் மேக்ஸ்வெல் மிரட்டலாக 5 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் விளாசினார்.
எனினும், மார்க் சாப்மேன் (Mark Chapman) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாச, வாஷிங்டன் அணி 189 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
An outstanding knock under pressure 🤌#FreedomExpress #MLC2025 pic.twitter.com/wJc7ZdZxZK
— Washington Freedom (@WSHFreedom) June 22, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |