விபத்தில் சிக்கிய அமெரிக்க விமானத்தில் பயணித்த பெண்: பயந்ததுபோலவே நடந்துவிட்டது
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றும், ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
என்றாலும், தன் மனைவியை யாராவது உயிருடன் மீட்க மாட்டார்களா என காத்திருக்கிறார் ஒருவர்.
பயந்ததுபோலவே நடந்துவிட்டது
அமெரிக்காவின் வாஷிங்டனில் விபத்துக்குள்ளாகியுள்ள விமானத்தில் பயணித்த ஒரு பெண்ணின் கணவர், யாராவது தன் மனைவியை நதியிலிருந்து மீட்க மாட்டார்களா என பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita என்னுமிடத்தில் பணி செய்துகொண்டிருந்திருக்கிறார் அந்த 26 வயது பெண்.
அவருக்கு எப்போதுமே விமானத்தில் பறப்பது என்றால் பயமாம். விடயம் என்னவென்றால், அவர் பயந்ததுபோலவே நடந்து விட்டது.
சந்தேகத்தை உருவாக்கிய குறுஞ்செய்தி
இதற்கிடையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சிறிது நேரத்துக்கு முன், அந்தப் பெண் தன் கணவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இன்னும் 20 நிமிடங்களில் தரையிறங்கிவிடுவோம் என்று கூறியுள்ளது அந்த செய்தி. மனைவியின் செய்திக்கு, பதில் செய்தி ஒன்றை அனுப்ப முயன்றுள்ளார் அவர்.
ஆனால், அதற்குப் பின் அந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் எதுவும் போகவில்லையாம்.
அப்போதே, ஏதோ பிரச்சினை என எனக்குத் தோன்றியது என்கிறார் அந்தப் பெண்ணின் கணவர்.
அதேபோல, சிறிது நேரத்தில் அந்தப் பெண் பயணித்த விமானத்துடன் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், அந்த விமானம் வெடித்து இரண்டாக உடைந்து நதி ஒன்றிற்குள் விழுந்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |