ஊசலாடிய இந்திய அணி..ஒற்றை ஆளாய் வாணவேடிக்கை காட்டிய தமிழன்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
மிட்செல் - கான்வே அதிரடி
ராஞ்சியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி மிட்செல் (59), கான்வே(52) ஆகியோரின் அபாரமான அரைசதத்தினால் 176 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், மாவி, குல்தீப் மற்றும் அர்ஷ்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
What a tremendous catch by Washington Sundar.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 27, 2023
Absolutely outstanding! pic.twitter.com/WyyCUKNHDE
பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷண் (4), கில் (7) மற்றும் திரிபாதி (0) ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை சூர்யகுமார் தனது அதிரடியால் தூக்கி நிறுத்தினார்.
50s for Devon Conway (52) and @dazmitchell47 (59*) push the team to a total batting first in Ranchi. Time to bowl! Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring | https://t.co/QaKoIoMTn1 #INDvNZ ? = BCCI pic.twitter.com/1nDAHybb9w
— BLACKCAPS (@BLACKCAPS) January 27, 2023
மறுபுறம் ஹர்திக் பாண்ட்யா பொறுமையாக ஆடினார். 34 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்திருந்த சூர்யகுமார் அவுட் ஆனார். அடுத்து ஹர்திக்(21), ஹூடா(10) வெளியேற இந்திய அணி சுருண்டுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர். அப்போது அதிரடியில் மிரட்ட துவங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சிக்ஸர்களை பறக்கவிட்டு நம்பிக்கையூட்டினார்.
முதல் அரைசதம்
அவர் மட்டும் வெற்றிக்காக போராடினார். 44 ஓட்டங்களில் இருந்த அவர் சிக்ஸர் அடித்து அரைசதம் தொட்டார். இது அவருக்கு முதல் டி20 அரைசதம் ஆகும்.
கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்த சுந்தர், 28 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களே எடுத்ததால், நியூசிலாந்து 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல், சாண்டனர், பெர்குசன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
A fighting fifty for Washington Sundar, but New Zealand go 1-0 up in the series with a convincing win ?#INDvNZ | ? Scorecard: https://t.co/gq4t6IPNlc pic.twitter.com/3sdxwDRhfJ
— ICC (@ICC) January 27, 2023