எகிறிய ஸ்டெம்ப் பெயில்ஸ்! டேவிட் மில்லர் விக்கெட் தட்டி தூக்கிய வாஷிங்டன் சுந்தர் வீடியோ
தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டேவிட் மில்லரை வாஷிங்டன் சுந்தர் க்ளீன் போல்ட் செய்த வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் ஆடிய போது அந்த அணியின் கேப்டன் டேவிட் மில்லர் 19வது ஓவரில் விளையாடி கொண்டிருந்தார்.
அவருக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். ஐந்தாவது பந்தை வீசும் போது பேட்டை தாண்டி சென்ற பந்து ஸ்டெம்பின் பெயில்ஸை பதம் பார்த்தது. ஆனாலும் மில்லர் களத்தில் இருந்து போகவில்லை, ஏனெனில் பந்து முதலில் பெயில்ஸில் பட்டதா அல்லது விக்கெட் கீப்பர் கைக்கு சென்று பின்னர் பெயில்ஸில் பட்டதா என்பதை தீர்மானிக்க முடியாமல் நடுவர் 3வது நடுவர் உதவியை நாடினார்.
அதில் மில்லர் போல்ட் ஆனது உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து 7 ரன்களுடன் அவர் நடையை கட்டினார்.