வெஸ்ட் இண்டீஸுடன் மோதும் இந்திய பிளேயிங் லெவன் வெளியானது! தமிழக வீரருக்கு வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போடடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று (பிப்ரவரி 6ம் திகதி) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். அதன் படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணிக்கு இது 1000வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்:
- ரோகித் சர்மா (கேப்டன்)
- இஷான் கிஷன்
- விராட் கோலி
- ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
- சூர்யகுமார் யாதவ்
- தீபக் ஹூடா
- வாஷிங்டன் சுந்தர்
- ஷர்துல் தாக்கூர்
- யுஸ்வேந்திர சாஹல்
- பிரசித் கிருஷ்ணா
- முகமது. சிராஜ்
கொரோனா தொற்று மற்றும் காயத்திலிருந்து மீண்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இன்று தனது அறிமுக போட்டியில் களமிறங்கும் தீபக் ஹூடா, விராட் கோலியிடம் இருந்து தொப்பியை பெற்றார்.
A look at #TeamIndia's Playing XI for the 1st ODI.
— BCCI (@BCCI) February 6, 2022
Live - https://t.co/NH3En574vl #INDvWI @Paytm pic.twitter.com/SYFrR5LZ5F