நூற்றாண்டு சாதனை படைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்
லார்ட்ஸ் மைதானத்தில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முறியடித்தார்.
வாஷிங்டன் சுந்தர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) 22 ஓட்டங்களே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதுவே இந்த நூற்றாண்டில், லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாகும்.
இதற்கு முன்பு, இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே (Anil Kumble) 2007ஆம் ஆண்டில் 84 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
51 ஆண்டுகளுக்குப் பிறகு
மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் 51 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையையும் வாஷிங்டன் சுந்தர் படைத்துள்ளார்.
அத்துடன் ஒட்டுமொத்தமாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளரின் நான்காவது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.
11 டெஸ்ட் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |