கடைசிப் போட்டியிலும் ஜிம்பாப்பேவை வீழ்த்திய இந்திய அணி! தொடர் நாயகன் விருதை வென்ற தமிழக வீரர்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹராரேயில் நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடியது. ஜெய்ஸ்வால் 12 ஓட்டங்களும், அபிஷேக் ஷர்மா 14 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, சுப்மன் கில் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். ரியான் பராக் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மவுட்டா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
A 42-run victory in the 5th & Final T20I ?
— BCCI (@BCCI) July 14, 2024
With that win, #TeamIndia complete a 4⃣-1⃣ series win in Zimbabwe ??
Scorecard ▶️ https://t.co/TZH0TNJcBQ#ZIMvIND pic.twitter.com/oJpasyhcTJ
அடுத்து சாம்சன் 45 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 58 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். ஷிவம் தூபே 12 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 18.3 ஓவரில் 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக டியான் மயேர்ஸ் 34 ஓட்டங்களும், மருமனி 27 ஓட்டங்களும், ஃபராஸ் அக்ரம் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும், ஷிவம் தூபே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
???????!#TeamIndia clinch the T20I series 4⃣-1⃣ ??
— BCCI (@BCCI) July 14, 2024
Scorecard ▶️ https://t.co/TZH0TNJKro#ZIMvIND pic.twitter.com/ulza0Gwbd7
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |