2021 ஐபிஎல் தொடரிலிருந்து தமிழக வீரர் விலகல்... கோலி அணிக்கு பெரிய இழப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் 2021 தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடந்த County Select XI-இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் போது வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட X-Ray-வில் விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானது.
இந்நிலையில், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
ஆல் ரவுண்டர் வாஷிங்கடன் சுந்தருக்கு பதிலாக வங்காளத்தைச் சேர்ந்த மாநில கிரிக்கெட் வீரர் ஆகாஷ் தீப் கோலியின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என RCB அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.