வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மேலும் ஒரு இந்திய வீரர் விலகல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து மேலும் ஒரு இந்திய வீரர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது. இன்று நடக்கும் முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் காயம் காரணமாக கே.எல்.ராகுல், அக்ஸர் படேல் ஆகிய இந்திய வீரர்கள் விலகியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் அசத்திய மற்றொரு இந்திய வீரரான வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்திற்கான சிகிச்சை பெற கொல்கத்தாவிலிருந்து அவர் பெங்களூரு செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.