16 பந்துகளில் 37 ஓட்டங்கள்.. சிக்ஸர்களை பறக்கவிட்ட தமிழர்! 13 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
மூன்று அரைசதம்
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 80 ஓட்டங்களும், கேப்டன் தவான் 72 ஓட்டங்களும், கில் 50 ஓட்டங்களும் விளாசினர்.
மிரட்டிய வாஷிங்டன் சுந்தர்
கடைசி கட்டத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியில் மிரட்டினார். அவர் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 37 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
can you blame us for making the obvious '??? ??????' pun for this Washi batting video? ?
— prime video IN (@PrimeVideoIN) November 25, 2022
Watch the 1st #NZvIND ODI, LIVE & EXCLUSIVE on Prime Video: https://t.co/3btfvTeRUG@Sundarwashi5 #NZvINDonPrime #CricketOnPrime pic.twitter.com/pBVvRBAmZP
கடந்த 2009ஆம் ஆண்டில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக 30 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற 13 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
ரிஷப் (15), சூர்யகுமார் (4) ஏமாற்றம் அளித்த நிலையில், சஞ்சு சாம்சன் 36 (38) ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.