தமிழக வீரரின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து! இந்திய அணிக்கு 193 ரன் இலக்கு
லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணிக்கு 193 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிராஜின் மிரட்டல்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நான்காவது நாள் ஆட்டத்தை ஆடிய இங்கிலாந்து அணி சிராஜின் மிரட்டல் பந்துவீச்சில் தொடக்க விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதன் பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்களை தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) அபார சுழற்பந்துவீச்சில் வெளியேற்றினார்.
அசத்திய வாஷிங்டன் சுந்தர்
குறிப்பாக சுந்தரின் பந்துவீச்சில் முக்கிய வீரர்களான ஜோ ரூட் (40), பென் ஸ்டோக்ஸ் (33) மற்றும் ஜேமி ஸ்மித் (8) ஆகிய மூவரும் கிளீன் போல்டு ஆகினர்.
கடைசி கட்டத்தில் கிறிஸ் வோக்ஸ், கார்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்ற, இங்கிலாந்து அணி 192 ஓட்டங்களுக்கு சுருண்டது.
வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் ஓட்டங்கள் எடுக்காமல் ஆர்ச்சர் ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கருண் நாயர் 14 ஓட்டங்களிலும், கில் 6 ஓட்டங்களிலும் கார்ஸ் பந்துவீச்சில் வெளியேறினர்.
பென் ஸ்டோக்ஸ் ஓவரில் ஆகாஷ் தீப் கிளீன் போல்டு ஆக, நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது.
இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 (47) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |