அஸ்வின் இல்லைனா என்ன? நான் இருக்கேன்... ஸ்மித் விக்கெட்டை காலி செய்த தமிழன் வாஷிங்டன் சுந்தர் வீடியோ
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய அறிமுக போட்டியிலே, ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் நடைபெற்று வருகிறது.
பிரிஸ்போனை பொறுத்தவரை அவுஸ்திரேலியாவின் கோட்டை, இங்கு அவுஸ்திரேலியாவை கடந்த 36 ஆண்டுகளாக எந்த அணியும் வீழ்த்தியது இல்லை.
இதனால் இப்போட்டியில், அவுஸ்திரேலியா நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியில் முக்கிய பந்து வீச்சாளர்களான பும்ரா, அஸ்வின் ஆகியோர் இல்லை.
What a moment for Washington Sundar! His first Test wicket is the superstar Steve Smith! #OhWhatAFeeling@Toyota_Aus | #AUSvIND #Trending #TrendingNow #RohitSharma #WashingtonSundar pic.twitter.com/D2hePX55C2
— ᴄʀɪsᴛɪᴀɴᴏ ʀᴏɴᴀʟᴅᴏ (@_Cristiano_ron) January 15, 2021
ஆனால், அவுஸ்திரேலியா அணி எதிர்பார்த்தது போன்று இல்லாமல், அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஸ்மித்தை திணறடித்தார்.
வாஷிங்டன் சுந்தருக்கு இது தான் முதல் டெஸ்ட் போட்டி என்பதால், அவுஸ்திரேலியா வீரர்களை தன்னுடை பந்து வீச்சில் மிரட்டினார்.
ஸ்மித்தோ, அஸ்வின் இல்லாததால், அசால்ட்டாக விளையாட, வாஷிங்டன் சுந்தர் அவரை துல்லியமான பந்து வீச்சின் மூலம் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
தன்னுடைய முதல் அறிமுக போட்டியிலே, வாஷிங்டன் சுந்தர் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியுள்ள நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.