இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அறிவுரை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கியுள்ளார்.
வாசிம் அக்ரம் அறிவுரை
நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்நிலையில், இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். விளையாடும்போது புதிய பந்துகளை கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால், அது 15வது ஓவர்களில் ஸ்விங்காகும்.
பந்து கூடுதலாக பவுன்ஸானாலும் ரொம்ப மகிழ்ச்சி பட வேண்டாம். நீங்கள் அமைதியாக இருப்பதையே ஆஸ்திரேலிய வீரர்கள் விரும்புகிறார்கள். இது ஜூன் மாதம். அதனால் மைதானத்தில் எல்லைகள் கொஞ்சம் வித்தியாசமாகதான் இருக்கும் என்று அறிவுரை கூறியுள்ளார்.