ரோஹித் போல் ஒருவரை பார்த்ததே இல்லை! புகழந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா போல் ஒரு வீரரை பார்த்ததே இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார்.
அரையிறுதியில் இந்தியா
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவை வைத்து நடைபெற்று வரும் நிலையில், இதன் லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ரோஹித் போல் ஒருவரை பார்க்க முடியாது
இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் இந்திய வீரர் ரோஹித் சர்மா போல் ஒரு வீரரை பார்த்ததே இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார்.
நான் விராட் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன், பாபர் அசாம் போன்ற வீரர்களை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம்.
Getty
ஆனால் ரோஹித் சர்மா முற்றிலும் மாறுபட்ட வீரர். எந்த சூழ்நிலையிலும், எந்தவொரு பந்து வீசினாலும் சுலபமாக ஓட்டங்களை குவித்து பேட்டிங்கில் அசத்துகிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |