இந்தியா, பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான்! ஹர்திக்கிற்கு ஆதரவு குரல்கொடுத்த ஜாம்பவான்
பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக களமிறங்கியதில் இருந்து சொந்த அணியின் ரசிகர்களினாலேயே வெறுப்புணர்வை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு போட்டியிலும் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியுறும் போட்டிகளில் ஹர்திக் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது.
கோலி உட்பட பல வீரர்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக ரசிகர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் ஆதரவு
ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக பேசிய வாசிம் அக்ரம், அணித்தலைவரை கேலி செய்வது அணிக்கு பயனளிக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ''வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான். நாம் வெறுப்புணர்வைக் கடைபிடிக்க முனைகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியா எப்படி அணித்தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதை நம் குழந்தைகளுக்கு கூறப்போகிறோம்.
நாம் ஒருபோதும் நகர மாட்டோம். ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார், மேலும் உங்களுக்காக விடயங்களை மாற்ற முடியும். உங்கள் சொந்த வீரரை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் சிறிது நேரம் எதிர்மறையாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தொடர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |