இலங்கை நேரம்! டி20 WCக்காக பந்துவீச்சாளர்களை தயார் செய்யும் பாகிஸ்தான் ஜாம்பவான்
பாகிஸ்தான் வேகப்பந்து ஜாம்பவான் வாசிம் அக்ரம், டி20 உலகக்கிண்ண தொடரில் சிறப்பாக விளையாட இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கிண்ண தொடருக்கு முன்பாக, பாகிஸ்தான் வேகப்பந்து ஜாம்பவான் வாசிம் அக்ரமை சிறப்பு பாத்திரத்தில் சேர்த்துள்ளது.
அதாவது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை வாசிம் அக்ரம் செய்ய உள்ளார். அவர் 2 நாள் பயிற்சி திட்டத்தை நடத்துவார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்தது.
Former Pakistani legend @wasimakramlive will conduct a two-day training program for national players, SLC High Performance Coaches, and the coaches of the major clubs.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) May 1, 2024
READ: https://t.co/OXdKD7GjTu #SLC #SriLankaCricket
அதன்படி, வாசிம் அக்ரம் இன்று தனது பணியை இலங்கையில் தொடங்கினார். அத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் ''இலங்கை நேரம்'' என பதிவிட்டார்.
இதன்மூலம் அக்ரமின் அனுபவமும், நிபுணத்துவமும் மதிப்புமிக்க வீரர்களுக்கு விலைமதிப்பற்ற ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Srilanka Time ??@OfficialSLC #Mentor #Cricket pic.twitter.com/YOCY5aKOHO
— Wasim Akram (@wasimakramlive) May 2, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |