சிஎஸ்கே-வில் தோனிக்கு பிறகு இவர் தான் கேப்டன்: முன்னாள் இந்திய வீரரின் சுவாரஸ்யமான தேர்வு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு கேப்டனாக இவரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அணியில் ஜடேஜா
கடந்த முறை சென்னை அணியின் கேப்டன் பதவியில் ஏற்பட்ட குளறுபடிகளால் விரக்தி அடைந்தாக கூறப்பட்ட ரவீந்திர ஜடேஜா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சார்பாக விளையாட மாட்டார் என்று வதந்திகள் வெளிவந்தன.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இடம் பெற்றுள்ளார், இதன்மூலம் வெளிவந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Everything is fine? #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022
மேலும் இது தொடர்பாக ஜடேஜா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்தும் நன்றாக உள்ளது, மறுதொடக்கம்" என தெரிவித்து தோனிக்கு வணக்கம் வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கடந்த முறையே கேப்டன் பதவியில் ஜொலிக்காத காரணத்தால், இந்த ஆண்டு மீண்டும் கேப்டன் பதவி ஜடேஜாவிற்கு செல்வது கேள்வி குறியாகியுள்ளது.
தோனிக்கு பிறகு யார்?
சென்னை அணியின் அடையாளம் மற்றும் தூணாய் விளங்கும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
இதனால் சென்னை அணியை தொடர்ந்து சிறப்பாக வழிநடத்த அணி நிர்வாகம் மற்றொரு திறமையான தலைவனைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது.
Kane Williamson & Dhoni-கேன் வில்லியம்சன் & தோனி (AP)
அந்த வகையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் கேன் வில்லியம்சன் மற்றும் மாயன் அகர்வால் ஆகியோரை குறிவைத்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
வாசிம் ஜாபரின் கணிப்பு
சென்னை அணி தீவிரமாக அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வாசிம் ஜாபர் சுவாரஸ்யமான பெயர் தேர்வை அறிவித்துள்ளார்.
அதில் தோனிக்கு பிறகு சென்னை அணி நிர்வாகம் ரிதுராஜ் கெய்க்வாட்-டை புதிய கேப்டனான நியமிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Keeping the Run meter ON! ??#VijayHazareTrophy #WhistlePodu ?? pic.twitter.com/7KrIpwre0v
— Chennai Super Kings (@ChennaiIPL) November 12, 2022
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் , தோனிக்கு பிறகு அணியை வழிநடத்திச் செல்லக்கூடிய புதிய கேப்டனை அந்த அணி நிர்வாகம் தீவிரமாக பார்த்து வருகிறது, அதில் அவர்களின் தேர்வாக ரிதுராஜ் கெய்க்வாட் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால் அவர் இளம் வீரர் மற்றும் மகாராஷ்டிரா அணியை தலைமை தாங்கிய அனுபவம் கொண்டவர், எனவே அணியின் அடுத்த தலைவராக அவரை வளர்த்தெடுக்க அணி நிர்வாகம் முயற்சிக்கலாம் என தெரிவித்துள்ளார்.