தித்திக்கும் சுவையில் வட்டிலப்பம்.., இலகுவாக செய்வது எப்படி?
வட்டலப்பம் என்பது இலங்கை இஸ்லாமியர்களிடையே பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்புப் பண்டமாகும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் வட்டிலப்பலத்தை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை- 3
- தேங்காய்- அரை கப்
- பட்டை- 1 துண்டு
- ஏலக்காய்- 2
- சர்க்கரை- 2 ஸ்பூன்
- வெல்லம்- ½ கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், ஏலக்காய், பட்டை சேர்த்து அரைத்து அதன் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் முட்டை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை சேர்த்து கேரமல் தயாரித்து பின் அதில் வெல்லம் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், வெல்ல கலவை மற்றும் முட்டை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இந்த பாத்திரத்தை வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான வட்டிலப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |