சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலே ஸ்டம்பை தெறிக்க விட்ட பஞ்சாப் வீரர்! பேசாமல் வெளியேறிய படிக்கல்லின் வீடியோ
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டேவிட் படிக்கல் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலே போல்டாகி வெளியேறிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணியும், பஞ்சாப்பின் கே.எல்.ராகுல் தலைமையிலான அணியும் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டியின் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலே பெங்களூரு அணியின் துவக்க வீரட் டேவிட் படிக்கல் சிக்ஸர் பறக்கவிட்டார். அதைத் தொடர்ந்து அடுத்த பந்தையும் தூக்கி அடிக்க முயன்ற அவரை, தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார் மேர்டித்.
வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...
இதனால் டேவிட் படிக்கல் அப்படியே திரும்பிக் கூட பார்க்காமல் வெளியேறினார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.