கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Disney Hotstar
கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி வரும் டிஸ்னி ஹாட்ஸ்டார், 2024 டி20 போட்டிகளை மொபைலில் இலவசமாகப் பார்க்கலாம் என அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடர் வருகின்ற ஜூன் 2 முதல் ஜூன் 29 வரை நடைபெறவுள்ளது.
இதனை மொபைல் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளது.
வரும் மார்ச் 23 முதல் டி20 ஐபிஎல் தொடரை ஜியோசினிமா இலவசமாக ஒளிபரப்ப உள்ளது.
அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடரை ஹாட்ஸ்டார் இலவசமாக ஒளிபரப்ப உள்ளது.
எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மூன்று மாதங்களும் தினமும் கிரிக்கெட் போட்டிகளை தங்கள் மொபைலில் இலவசமாக கண்டு களிக்கலாம்.
ஐபிஎல் தொடர் உரிமையை ஜியோசினிமா வாங்கும் வரை ஹாட்ஸ்டார் செயலியில் கிரிக்கெட் போட்டிகளை காண பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
அதிக ரசிகர்கள் நேரலையில் போட்டிகளை பார்த்ததால் ஜியோ சினிமாவுக்கு விளம்பரங்கள் மூலம் வருவாய் அதிகரித்தது.
அதே பாணியை தற்போது ஹாட்ஸ்டாரும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது.
மேலும், ஜியோ சினிமாவை விட ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |