ஐபிஎல் ஏலத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த வாட்சின் விலை ரூ.1 கோடி.., அதன் சிறப்புகள்?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.1 கோடி என்று தெரியவந்துள்ளது.
நீடா அம்பானியின் கைக்கடிகாரம்
2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவியும், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளருமான நீடா அம்பானி கலந்து கொண்டார்.
அவர் அப்போது வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான ரோலெக்ஸ் கைகடிகாரம் ஒன்றை அணிந்திருந்தார். அதன் மதிப்பு தி இந்தியன் ஹாராலஜி என்ற பக்கத்தின்படி, ரூ.1,05,07,000 அல்லது ரூ.1.05 கோடி ஆகும்.
நீடா அம்பானி அணிந்திருந்த ரோலக்ஸ் நிறுவனத்தின் கைக்கடிகாரம் டே-டேட் (Day-Date) என்று அழைக்கப்படுகிறது.
இந்த கைக்கடிகாரத்தில் 18 காரட் விலை உயர்ந்த வெள்ளை தங்கம், வைர கற்கள் (18-carat white gold watch) பதிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள கற்கள், வானவில் வண்ண நீல மணிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தயார் செய்வதற்கு 1 ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும், ஆழ்கடலில் 7 மணி நேரம் இயங்கும் தன்மையுடையது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |