ரயிலில் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்? இந்த விதியை தெரிந்து கொள்ளுங்கள்
பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே 'இரவு 10 மணி விதியை' அமல்படுத்தியுள்ளது.
இரவு 10 மணி விதி
இரவு 10 மணிக்குப் பிறகு நீங்கள் தொலைபேசியில் ரீல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தாலோ பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம்.
இந்திய ரயில்வேயின் 'இரவு 10 மணி விதி'யின்படி, இரவு 10 மணிக்குப் பிறகு ரயிலில் அமைதியாக இருப்பது அவசியம். இந்த விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இரவு 10 மணிக்குப் பிறகு மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது. இந்த விதியின் நோக்கம், ஒவ்வொரு பயணிக்கும் பயணத்தின் போது நல்ல தூக்கம் மற்றும் ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதாகும்.
ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 145 இன் படி, ஒரு பயணி ரயிலில் அமைதியைக் குலைத்தால், சத்தம் எழுப்பினால் அல்லது மற்றவர்களுக்கு இடையூறு செய்தால், அது ஒரு குற்றமாகக் கருதப்படும்.
ரயில்வே முதலில் உங்களை எச்சரிக்கும் அல்லது ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கும்.
ரயில்வே விதிகளின்படி, அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்பது அல்லது ஹெட்ஃபோன்கள் இல்லாமல் வீடியோக்களை இயக்குவதும் தவறு.
இது தவிர, இரவில் இரவு விளக்கைத் தவிர ரயிலில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |