சாய்பல்லவி மாதிரி வெள்ளையா இருக்கனுமா; அப்போ இத பூசி பாருங்க
பொதுவாகவே பெண்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். அதற்காக பலவிதமான பொருட்களை பயன்படுத்தி தன்னை அழகுப்படுத்திக் கொள்வார்கள்.
ஆகவே வீட்டில் இருக்கும் தர்பூசணிக் கொண்டு எப்படி முகத்தை வெள்ளையாக மாற்றி, பராமரிக்கலாம் என்று பார்போம்.
தர்பூசணிகள் சருமத்தை முழுமையாக மாற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம். அது உண்மை தான். தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை நம் சருமத்திற்கு நல்ல ஒரு பலனை தரும்.
ஆகவே வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களைப் பயன்படுத்தி தர்பூசணி ஃபேஷியல் மூலம் உங்கள் சருமத்தை எப்படி அழகுப்படுத்தலாம் என தெரிந்துக்கொள்வோம்.
1 - முகத்தை சுத்தம் செய்தல்
சிறிது தர்பூசணி சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பருத்தி துணியைப் பயன்படுத்தி, அதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, குறைந்தது 5-10 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவவும்.
2 - தர்பூசணி ஸ்க்ரப்
தர்பூசணி சாறு மற்றும் அரிசி தூள் சேரத்து கலந்துக்கொள்ள வேண்டும்.
சுமார் 3-5 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மெதுவாக ஸ்க்ரப்பை மசாஜ் செய்யவும்.
இந்த ஸ்க்ரப் அனைத்து இறந்த சருமம், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளை அகற்றும்.
3 - மசாஜ்
சிறிது தர்பூசணி சாறு, தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு மசாஜ் கிரீம் தயார் செய்யவும்.
இந்த கிரீம் தோலில் உறிஞ்சப்படும் வரை வட்ட இயக்கத்தில் உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இந்த மசாஜ் க்ரீம் உங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பொலிவை சருமத்தை தரும்.
4 - தர்பூசணி ஃபேஸ் பேக்
இறுதியாக ஒரு பாத்திரத்தில், சிறிது உளுத்தம்பருப்பு , பால் மற்றும் சிறிது தர்பூசணி சாறு சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
அதை முகம் முழுவதும் பூச வேண்டும்.
15 நிமிடங்கள் அல்லது அது காயும் வரை விடவும், பின்னர் சாதாரண நீரில் கழுவவும்.
குறிப்பு:- ஃபேஷியல் செய்த உடனேயே எந்தவொரு சருமப் பராமரிப்புப் பொருளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.