ஐந்தே நாட்களில் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தர்பூசணியை இப்படி எடுத்துகோங்க போதும்
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி எடை இழப்பு உணவுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில் இதில் கலோரி அளவு மிக மிகக் குறைவு.
ஒரு கப் தர்பூசணி பழத்தில் கிட்டதட்ட வெறும் 46 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதோடு நார்ச்சத்தும் சுமார் 139 கிராம் அளவு தண்ணீர் சத்தும் இருப்பதால் இது பசியைக் கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனை டயட்டில் சேர்த்து கொள்வது இன்னும் நன்மையே வழங்கும்.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க தர்பூசணியை எப்படி டயட்டில் சேர்த்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
Photo: Karolina Grabowska / Pexels
முதல் நாள்
காலை உணவு: தர்பூசணி 2 துண்டுகள் மற்றும் ஒரு கப் கிரீன் டீ.
மதிய உணவு: 150 கிராம் வேகவைத்த சிக்கன் அல்லது மீன் மற்றும் ஒரு துண்டு தர்பூசணியுடன் அதே அளவுக்கு ப்ரௌன் ரைஸ்.
இரவு உணவு: 60 கிராம் சீஸ், இரண்டு ரொட்டி துண்டுகள் மற்றும் ஒரு தர்பூசணி துண்டு.
இரண்டாம் நாள்
காலை உணவு: 1 துண்டு தர்பூசணி, ஒரு கப் க்ரீன் டீ மற்றும் ஒரு பிரட் டோஸ்ட்.
மதிய உணவு: 100 கிராம் வேகவைத்த சிக்கன் மற்றும் ஒரு துண்டு தர்பூசணியுடன் இரண்டு ரொட்டி துண்டுகள்.
இரவு உணவு: 100 கிராம் க்ரில் செய்யப்பட்ட மீன், 100 கிராம் அரிசி சாதம், மற்றும் ஒரு துண்டு தர்பூசணி.
மூன்றாம் நாள்
காலை உணவு: 1 துண்டு தர்பூசணி, ஒரு கப் க்ரீன் டீ மற்றும் ஒரு துண்டு கோதுமை பிரட்
மதிய உணவு: தக்காளி சாஸில் 50 கிராம் பாஸ்தா சேர்த்தது மற்றும் தர்பூசணியின் மூன்று துண்டுகள்.
இரவு உணவு: வயிறு நிரம்பும் அளவுக்கு சாலட் மற்றும் தர்பூசணி.
நான்காம் நாள்
காலை உணவு: தர்பூசணி 2 பெரிய துண்டுகள்.
மதிய உணவு: ஒரு கப் வெஜிடபிள் சூப், ஒரு துண்டு பிரட், இரண்டு தர்பூசணி துண்டுகள்.
இரவு உணவு: உணவில் மூன்று மீடியம் சைஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் இரண்டு தர்பூசணி துண்டுகள்.
ஐந்தாம் நாள்
காலை உணவு: 3 பெரிய தர்பூசணி துண்டுகள்.
மதிய உணவு: 150 கிராம் வேகவைத்த லீன் மீட் (சிக்கன், மீன்) மற்றும் தர்பூசணி (வயிறு நிரம்பும் வரை)
இரவு உணவு: இரண்டு முழு தானிய பிரட், அதனுடன் 60 கிராம் வரை பாலாடைக்கட்டி சேர்த்துக் கொள்ளலாம். தர்பூசணியின் மூன்று துண்டுகள்