தித்திக்கும் சுவையில் தர்பூசணி அல்வா.., இலகுவாக எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த தர்பூசணி அல்வாவை விரும்பி உண்ணுவார்கள்.
இந்த சுவையான தர்பூசணி அல்வாவை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தர்பூசணி- 2 கீற்று
- நெய்- தேவையான அளவு
- முந்திரி- 10
- சர்க்கரை- ½ கப்
- எலுமிச்சை- ½
- ரோஸ் எசன்ஸ்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் தர்பூசணியின் தோல்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் உள்ள மேல் தோலை சீவிவிட்டு தர்பூசணியின் வெள்ளை நிற பகுதியை துருவி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை ஒரு துணி கொண்டு நன்கு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் துருவிய தர்பூசணி தோலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் இதில் சர்க்கரை சேர்த்து கிளறி அதில் எலுமிச்சை, ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிளறவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறினால் சுவையான தர்பூசணி அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |