கோடை வெயிலுக்கு குளுகுளு தர்பூசணி மில்க்ஷேக்: எப்படி செய்வது?
கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு.
இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அந்தவகையில், கோடை வெயிலுக்கு இதமான குளுகுளு தர்பூசணி மில்க்ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தர்பூசணி - ½ பழம்
- பால் - ½ லிட்டர்
- சர்க்கரை - தேவையான அளவு
- பாதாம் பிசின் - 2 ஸ்பூன்
- சப்ஜா விதை - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தர்பூசணி ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், பாதாம் பிசின், சப்ஜா விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளு குளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |