சென்னையில் உள்ள தர்பூசணி பழங்களில் கலப்படமா? உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம்
அனைத்து தர்பூசணி பழங்களிலும் ரசாயன ஊசி போடப்படுவதாக தகவல் பரவும் நிலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
அதிகாரி விளக்கம்
கோடை காலம் வந்தாலே தர்பூசணி பழங்களை தான் மக்கள் அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். இதனால், அதன் விற்பனை அதிகரித்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
ஆனால், தற்போது தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி கலப்பதாக செய்தி ஒன்று பரவுவதால் மக்கள் அதனை வாங்க மறுக்கின்றனர். இதனால் அதன் விற்பனையும் சரிந்துள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி கலப்பதாக கூறியிருந்தனர். இதனால் அதிகாரிகள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோயம்பேட்டில் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகளின் தவறான குற்றச்சாட்டால் தங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர். மேலும், போராட்டத்தின் போது சாலையில் தர்பூசணி பழத்தை வீசினர். பின்னர், பொலிசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "சென்னையில் இதுவரை எந்த இடத்திலும் ரசாயன ஊசி போடப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்கப்படவில்லை. நானும் தர்பூசணி பழங்கள் தொடர்ந்து சாப்பிடுகிறேன்.
இதனால் எனக்கு பாதிப்பு ஏற்படவில்லை. நாங்கள் விவசாயிகளுக்கும், பழ வியாபாரிகளும் எதிரானவர்கள் அல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |