பிரித்தானியாவை நடுக்கிய விவகாரம்... பெண் ஒருவர் சிறையில் இருந்து விடுவிப்பு: தாயார் கண்ணீர்
பிரித்தானியாவில் 16 வயது பெண் ஒருவரை காதலருடன் இணைந்து கொடூரமாக கொலை செய்த பெண் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
எட்டரை ஆண்டுகள் சிறை தண்டனை
17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்த Shauna Hoare என்பவர் சுமார் எட்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ள நிலையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
@pa
இவரது முன்னாள் காதலன் 29 வயதான நாதன் மேத்யூஸுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பலாத்காரம் செய்யும் நோக்கில் தனது வளர்ப்பு சகோதரியை கடத்தி, பின்னர் கொலை செய்த வழக்கில் நாதன் மேத்யூஸ் தண்டிக்கப்பட்டுள்ளார்.
2015 பிப்ரவரி 19ம் திகதி 16 வயதேயான பெக்கி வாட்ஸ் தமது குடியிருப்பில் கடைசியாக காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது அறைக்குள் நுழைந்த நாதன் மேத்யூஸ் மற்றும் அவரது காதலி Shauna Hoare ஆகியோர் அவரை தாக்கி மூச்சுத் திணறடித்து கொலை செய்துள்ளனர்.
கோபத்தை ஏற்படுத்துவதாக பெக்கியின் தாயார்
பின்னர் சடலத்தை தங்கள் குடியிருப்புக்கு கொண்டு சென்று, உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். மார்ச் 3ம் திகதி பெக்கியின் துண்டாக்கப்பட்ட உடல் பாகங்கள் மேத்யூஸின் குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டது.
Credit: News Group Newspapers Ltd
இதனையடுத்து காதலர்களை பொலிசார் கைது செய்தனர். Shauna Hoare தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது, கோபத்தை ஏற்படுத்துவதாக கூறும் பெக்கியின் தாயார், ஆனால் சட்டத்தை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Shauna Hoare-ஐ பெக்கி முழுமையாக நம்பினார் எனவும், தாம் எப்போது பெக்கியை தொலைபேசியில் அழைத்தாலும், Shauna Hoare தான் பதில் அளிப்பார் எனவும் அந்த தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |