19 பந்தில் 52 ரன்கள்! சிக்ஸர் மழையில் அரைசதம்..வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கிய அவுஸ்திரேலியா (வீடியோ)
மகளிர் அவுஸ்திரேலிய அணி சிட்னியில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20யில் 212 ஓட்டங்கள் குவித்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிஸ்ஸா ஹீலி முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த டஹ்லியா 4 ஓட்டங்களிலும், மூனே 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். எல்லிஸி பெர்ரி சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சுழன்று அடித்த அவர் 46 பந்துகளில் 70 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினார். அதன் பின்னர் போஎபே லிட்ச்ஃப்பீல்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
Good player this Ellyse Perry, looks like she could have a bright future ahead of her. #AUSvWI pic.twitter.com/ZXuCe5gtxq
— cricket.com.au (@cricketcomau) October 2, 2023
சிக்ஸர் மழை பொழிந்த அவர் 19 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் குவித்தார். அவருடன் கைகோர்த்த வாரெஹம் 13 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 212 ஓட்டங்கள் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹேலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும், ஷாமிலியா 2 விக்கெட்டுகளும், சினேல்லே ஹென்றி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Now that's a SHOT from Phoebe Litchfield #AUSvWI pic.twitter.com/TGYHkTMUZf
— cricket.com.au (@cricketcomau) October 2, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |