அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து! மழையால் பறிபோன வெற்றி
மகளிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டலியா மெக்ராத் 48
கான்பெர்ராவில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.
First reverse of the night from Pheebs ✅#Ashes pic.twitter.com/bVZsu6RYdT
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) January 23, 2025
பெத் மூனே அதிரடியாக 31 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டலியா மெக்ராத் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசினார்.
அதேபோல் கிரேஸ் ஹாரிஸ் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் குவித்தது. சார்லி டீன் 2 விக்கெட்டுகளும், கெம்ப் மற்றும் சோபி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
டேனியில்லே வயட் 52
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் மையா பௌசியர் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் டேனியில்லே வயட் மற்றும் சோஃபியா டங்க்லே அதிரடியில் மிரட்டினர்.
இந்தக் கூட்டணி 42 ஓட்டங்கள் குவிக்க, அரைசதம் அடித்த வயட் 52 (40) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சோஃபியா டங்க்லே 22 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மேகன் ஓவரில் கிளீன் போல்டு ஆனார்.
எனினும் அணித்தலைவர் ஹீதர் நைட் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றியை மிக விரைவாக நெருங்கியது.
கடைசி 5 பந்துகளில் 18 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அவுஸ்திரேலிய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி டி20 தொடரை கைப்பற்றியது. கடைசி டி20 போட்டி 25ஆம் திகதி நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |