நியூசிலாந்தை வதம் செய்த அவுஸ்திரேலிய அணி! 88 ரன்னுக்கு ஆல்அவுட்
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றையப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது.
அமெலியா கெர் அபாரம்
ஷார்ஜாவில் நடந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.
பெத் மூனே (Beth Mooney) 40 ஓட்டங்களும், எல்லிஸ் பெர்ரி 30 ஓட்டங்களும் எடுத்தனர். அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்தின் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளும், ரோஸ்மேரி மைர் மற்றும் ப்ரூக் ஹாலிடே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
சுருண்ட நியூசிலாந்து
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் அந்த அணி 19.2 ஓவரில் 88 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அமெலியா கெர் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலிய தரப்பில் அன்னபெல், மேகன் தலா 3 விக்கெட்டுகளும், சோஃபி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |