284 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! புதிய வரலாறு படைத்த அவுஸ்திரேலியா
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுவஸ்திரேலியா அணி 284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
பெர்த்தில் நடந்த மகளிர் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 76 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. டர்சி பிரவுன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
@Getty
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 575 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அனபெல் சதர்லேண்ட் 210 ஓட்டங்களும், ஹீலி 99 ஓட்டங்களும், மூனே 78 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் 499 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணி அவுஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 215 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா 284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் மற்றும் க்ளோ ட்ரியோன் தலா 64 ஓட்டங்கள் எடுத்தனர்.
2001ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணியின் பாரிய வெற்றி இதுவாகும். அதேபோல் மகளிர் அவுஸ்திரேலிய அணியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும். அந்த அணி 1998ஆம் ஆண்டில் 569/6 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
@X
@Paul Kane/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |